கனடாவின் ஒன்ரோரியோவில் அதிகரித்த பனிப்பொழிவு; அதிகவிபத்துக்கள் பதிவாகிறது

169

கனடாவின் ஒன்ராரியோ பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் அதிக பனிப்பொழிவு தொடர்வதனால் அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப் பொழிவு நிலைமை காணப்படுவதாகவம் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனிப்பொழிவு காரணமாக பாதைகள் பனி படர்ந்த நிலையில் உள்ளதால் அதிக பத்துக்கள் பதிவாகியுள்ளன. குறித்த பகுதியின் அனேகமான பாடசாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை மற்றும் விபத்துக்கள் காரணமாக பல பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.