கனகராயன்குளத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட சோகம் கணவன் மனைவி மரணம்!

109

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் [01.01] இரவு 9.00 மணியளவில்
இளம் குடும்பஸ்தர்கள் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் விழுந்து மரணம்

வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் மிகவும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

​இந்தச் சம்பவம் குறித்து  மேலும் தெரியவருவது கணவனும் மனைவியும் அவர்களது வீட்டு வளவில் இருந்த கிணற்றில் விழுந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

​நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் கூறப்படுகிறது.

​இது தற்கொலையா அல்லது தவறுதலாக கிணற்றில் விழுந்தார்களா என்ற கோணத்தில்  கனகராயன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.