கத்தி முனையில் முச்சக்கர வண்டி கொள்ளை: பொலிஸாரைக் கொல்ல முயற்சி!

134

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நபர் ஒருவரைக் கத்தி முனையில் மிரட்டி அவரது முச்சக்கர வண்டி கொள்ளையிட்டவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2022 மே 8 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் சென்றமை மற்றும் அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை.

பரந்தன் சந்தி பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் முச்சக்கர வண்டியால் மோதி பலத்த காயம் ஏற்படுத்தியமை என்பவற்றுக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று தண்டனையை விதித்துள்ளார்.