கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகள் அத்துமீறல் – கடற்படை தளத்திற்கு அருகில் அட்டகாசம்

96

கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறல் – கடற்படை தளத்திற்கு அருகேவே அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில், இந்திய இழுவைமடி படகுகள் தொடர்ந்து அத்துமீறி கடல்சார் பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத இழுவைமடி தொழிலில் ஈடுபட்டு வருவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

வடமராட்சி கிழக்கு கடல்பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உள்ளூர் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லாத நிலையில், இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய இழுவைமடி குழுக்கள் கரைக்கு வெறும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அண்மித்து வந்து தொடர்ச்சியாக மீன்பிடி செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டவிரோத நடவடிக்கையால் இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான கடல் வளங்கள் கண்கூடாக அழிக்கப்படுகின்றன எனவும் மீனவர் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

 

மேலும் ஆச்சர்யமாக, வெற்றிலைக்கேணி பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய கடற்படை தளம் அருகேவே இந்திய படகுகள் எந்தவித அச்சமுமின்றி செயற்படுவது குறித்து உள்ளூர் மீனவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அத்துமீறல்களை தடுக்க இதுவரை எந்தவித நிரந்தரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.