கடைசி பந்தில் திரில்லர் – டெல்லியை 1 ரன்னால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்

115

ஐபிஎல் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். ஜாஸ் பட்லர் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 55 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பதிலுக்கு 211 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பதும் நிசாங்கா 41 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ரன்கள் குவித்தும் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

போட்டியின் இறுதி கட்டத்தில் டெல்லி அணிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால் வெற்றி குஜராத் அணிக்கு சென்றது. 20 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்த டேவிட் மில்லரின் முயற்சியும் வீணானது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.