கடலில் வீழ்ந்த தமிழக மீனவர் – முல்லைத்தீவு கடற்பரப்பில் தேடுதல்

188

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர் முல்லைத்தீவு கடலில் தவறி வீழ்ந்தவரை தேட உதவி கோரும் குடும்பத்தினர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர், இழுவைமடி படகில் இருந்து தவறி கடலில் வீழ்ந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கடந்த சனிக்கிழமை (03.01) மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழு, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (05.01) அதிகாலை 1.00 மணியளவில், படகில் இருந்த டாட்டா நகர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அறிவு அன்பழகன் (வயது 36) என்பவர் எதிர்பாராத விதமாக கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, அவரை விரைவாகக் கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.