‘கஞ்சா சிப்ஸ்’ மற்றும் கொக்கைன் கடத்தல் – சின்னத்திரை நடிகர் கைது!

157

பிலியந்தலை, பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் (Boarding Room) இருந்து 10 மில்லி கிராம் கொக்கைன் மற்றும் கஞ்சா கலந்த, 255 கிராம் ‘சிப்ஸ்’ (Chips)வகை போதைப்பொருட்களுடன் பிரபல சின்னத்திரை நடிகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்படுவதாக மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த தங்குமிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய நபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிலியந்தலையிலுள்ள அவரது வீட்டைச் சோதனையிட்ட போது அங்கு 255 கிராம் கஞ்சா கலந்த ‘சிப்ஸ்’ கண்டெடுக்கப்பட்டது.

போதைப்பொருள் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு கூரியர் (Courier) சேவை ஊடாக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.