ஒரே நேரத்தில் தெரிந்த நான்கு நிலவுகள் – வானில் அபூர்வக் காட்சி.!!

155

ரஷ்யாவின் செயிண்ட் பீற்றர்ஸ்பர்கில் வாழும் மக்கள், வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் காணப்படும் அபூர்வக் காட்சியைக் கண்டு வியப்படைந்தார்கள். நிலவுக்கு அருகில் மேலும் மூன்று நிலவுகள் இருப்பது போன்று தோன்றும் அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகின்றன.

இது ஒரு போலியான தோற்றமாகும். அதாவது, நிலவின் ஒளி, ஒரு குறிப்பிட்ட வகையிலான, cirrus என்னும் பனிக்கட்டிகள் நிறைந்த மேகங்கள் வழியாக ஒளிச்சிதறல் அடையும்போது இந்த நிலவு நாய் அல்லது போலி நிலவுகள் தோன்றுகின்றன.

இதேபோன்ற நிகழ்வு சூரியனாலும் உருவாகுமாம். அது சூரிய நாய்கள் என அழைக்கப்படுகிறது. முக்கிய விடயம் என்னவென்றால், இந்த நிகழ்வுகளால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அத்துடன், அது வெறும் தோற்றம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.