ஒரே ஓவரில் 34 ஓட்டங்களை விளாசிய ஹர்திக் பாண்டியா; அதிரடி சதம் !!

183

ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள் விளாசியுள்ளார். விஜய் ஹசாரே கிண்ண தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் பரோடா மற்றும் விதர்பா அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற விதர்பா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய பரோடா அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 293 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக, ஹர்திக் பாண்டியா 92 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் உட்பட 133 ஓட்டங்கள் குவித்தார். இதில், பார்த்த் ரேகாடே வீசிய 39வது ஓவரில், முதல் 5 பந்துகளையும் சிக்ஸர் விளாசியதோடு, 6 வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

இதன் மூலம்,விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, அமன் மொகதே 150 ஓட்டங்கள் எடுத்தார். அதர்வ தைடே மற்றும் துருவ் ஷோரே தலா 65 ஓட்டங்கள் எடுத்தனர்.