ஏன் மார்ச் 8-ம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது? – போராட்டங்களும், தியாகங்களும் நிறைந்த வரலாறு.!

165

இன்று சர்வதேச மகளிர் தினம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவது இதன் நோக்கம்.

மகளிர் தினம் தொடங்கிய காரணத்தை அறிய 108 ஆண்டுகள் பின்நோக்கிச் செல்வோம். 1909-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நிகரில் 15,000 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவுக்கதிக வேலை நேரம், குறைந்த வருமானம், வாக்களிக்கத் தகுதியில்லை போன்ற முழக்க வரிகளுடன் பெண்கள் பேரணி நடத்தினர்.

‘Socialist Party of America’ என்னும் கட்சி பெண்களின் எழுச்சியைக் கொண்டாடியது.

அடுத்த ஆண்டு அனைத்துலக சோஷியலிஸ்ட் கட்சி டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் நடத்திய மாநாட்டில் ‘தேசிய மகளிர் தினம்’ குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அதை ஆதரித்து ஒருமனதாக வாக்களித்தனர். சர்வதேச அளவில் அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

1911-ம் ஆண்டு முதல்முறையாக `அனைத்துலக மகளிர் தினம்’ அனுசரிக்கப்பட்டது.

மார்ச் 19 அன்று நடைபெற்ற கொண்டாட்டங்களில் பத்து லட்சத்துக்கும் அதிக பெண்கள் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இந்த தினத்தைக் கொண்டாடின.

வேலையிடங்களில் நிலவும் பாலினப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் முழக்கங்கள் இடம்பெற்றன.

1913-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று ரஷ்யப் பெண்கள் முதல்முறையாக சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். 1913-ம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு, சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று பின்பற்றப்படுகிறது.