ஏணி முறிந்து விழுந்ததில் முதியவர் பரிதாப பலி.!

275

கஹடகஸ்திகிலிய, கொக்எம்பே பிரதேசத்தில் மரம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.