எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு! நாளை நாட்டை வந்தடையும் எரிவாயு கப்பல்.

94

3,700 மெட்ரிக் டன் எல்.பி. (LP) எரிவாயுவை ஏற்றியுள்ள மேலும் ஒரு கப்பல் நாட்டை அடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்ததாவது, இந்த கப்பல் வருகையுடன் இம்மாதம் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிவாயு அளவு 28,000 மெட்ரிக் டன்களை கடந்துள்ளது.

இந்த கையிருப்பின் விநியோகம் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மேலும், தினசரி சந்தைக்கு விடப்படும் எரிவாயு அளவை 1,200 மெட்ரிக் டன்னிலிருந்து 1,700 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை நாட்டை அடையவுள்ள குறித்த கப்பலுக்கான ஏற்றும் பணிகள் தற்போது மாலைதீவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுவேளை, தொடர்ந்து நிலையான விநியோகத்தை உறுதி செய்ய கூடுதலாக நான்கு கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.