“எங்கள் உறவுகள் எங்கே?” – கிளிநொச்சியில் ஒலித்த குரல்!

178

“எங்கள் உறவுகள் எங்கே?”, “ஒன்பது ஆண்டுகளை கடந்தும் தொடரும் போராட்டம் – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடி ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த நிலையில், நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்பத்தினரின் புகைப்படங்களை ஏந்தியபடி உண்மை மற்றும் நீதி கோரி கோஷமிட்டனர்.

“எங்கள் உறவுகள் எங்கே?”, “சர்வதேச தலையீடு வேண்டும், நீதி வேண்டும்” என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் ஒலித்தன. பல ஆண்டுகளாக எந்தத் தீர்வும் கிடைக்காத சூழலில், சர்வதேச சமூகமும் அரசும் தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் வலியுறுத்தினர்.