உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர்கள் சாதனை.!

120

இந்தியா- பெங்களூரில் நடந்த 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.

இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் கலந்துகொண்டு பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணிக்கு இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து, இலங்கையில் யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.