உலக முடிவில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்த மாணவி; ஒரு மணிநேரம் உயிரைப் பிடித்துக் காத்த சாரதி.!

180

பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19) உலக முடிவு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அக் குழுவிலிருந்த 23 வயதுடைய மாணவியொருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார்.

இவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியா பகுதியை சேர்ந்த வாகன சாரதி தனது உயிரை பணயம் வைத்து அந்த மாணவியை காப்பாற்றுவதற்காக பள்ளத்தில் இறங்கி சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் இராணுவத்தினர் வரும் வரையில் அம் மாணவியை இறுகப்பற்றிபிடித்த வண்ணம் இருந்துள்ளார்.

சாரதியின் முயற்சியோடும் இராணுவத்தினரின் உதவியுடனும் குறித்த மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டது.