உலக சந்தையை ஆக்கிரமிக்கும் இலங்கையின் தென்னைத் தயாரிப்புகள்.!!

151

இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 சதவீத வளர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய்ப் பால், தேங்காய் கிரீம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றிற்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் கேள்வியே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மதிப்புக்கூட்டப்பட்ட தென்னைத் தயாரிப்புகளுக்கு உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை இது உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.