உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! தங்கம் விலை உச்சத்திற்கு காரணம்?

168

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், உலகத்தில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் தங்கம் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.

உலக நாடுகள் வர்த்தகத்திற்கு அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி வரும் நிலையயில்,அமெரிக்க டொலர் மதிப்பு குறையும்போது உலக அளவில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

இதனால், ஒரு பாதுகாப்பான முதலீடு முக்கியம் என கருதும் உலக நாடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளன.

உலக அளவில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து டொலரின் மதிப்பும் சரிவினை சந்திப்பதனால், முதலீட்டாளர்களும் தங்கத்தின் பக்கம் தங்களது முதலீடுகளைத் திருப்பியுள்ளனர்.

எந்த நாடு உலக அளவில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கிச் செல்வார்கள். முதலீடுகள் ஒருபக்கத்தை நோக்கிச்செல்லும்போது, அது ஏறுமுகத்தைக் காணும். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.