உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை: பரீட்சைகள் திணைக்களம்

105

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 5, 2025 வரை நடைபெற்றது.

டித்வா புயலால் ஏற்பட்ட , சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டு, எஞ்சிய பகுதிகள் ஜனவரி 12 முதல் 20, 2026 வரை நடைபெறுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.