ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள்: 93,000க்கும் மேற்பட்ட சிவில் இடங்கள் சேதம்.!

173

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களால், ஈரானில் உள்ள சிவில் உடமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக Iran Red Crescent Society வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

தாக்குதல்கள் தொடங்கிய ஐந்து வாரங்களுக்குள், 93,000க்கும் அதிகமான சிவில் இடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 71,547 வீடுகளும், 20,779 வர்த்தக நிலையங்களும் முழுமையாக அல்லது பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக Tehran நகரில் மட்டும் 31,562 வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 600 பாடசாலைகளும், 295 சுகாதார நிலையங்களும் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

யுத்த சூழ்நிலையால் அவசர சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 48 அவசர உதவி சேவை வாகனங்கள் மற்றும் 3 நிவாரண ஹெலிகொப்டர்கள் சேதமடைந்ததாகவும் அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை, ஈரானில் மனிதாபிமான மற்றும் அடிப்படை வசதிகள் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.