ஈரானில் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல்: 13 பொதுமக்கள் உயிரிழப்பு.!

97

ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் இராணுவ இலக்குகளைத் தாண்டி, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை நேரடியாக குறிவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக பலர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண், இரண்டு சிறு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.