ஈரானிய சிறுமிகளின் உயிரை பறித்த அமெரிக்க தாக்குதல்: ட்ரம்ப் கொடுத்த விளக்கம்.

118

கடந்த வாரம் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பில் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்க இராணுவமே என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அதில், “எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இது ஈரானே செய்த வேலை. அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை. இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. தவறுதலாக அவர்களின் ஏவுகணையே அந்தப் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்” என விளக்கமளித்துள்ளார்.