இளம் வயதினரையும் தாக்கும் மூட்டு வலி: வீட்டிலேயே தயாரிக்கும் மூலிகை எண்ணெய்

85

 பொதுவாக வயதான பிறகு தான் மூட்டில் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள்.எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும்.

அந்தவகையில், மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய்- 2 கப்
  • விராலி இலை- ஒரு கைப்பிடி

தயாரிக்கும் முறை:

ஒரு இரும்பு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதை நன்றாக காய்ச்சவும்.பின் கழுவி உலர வைத்த விராலி இலைகளை அந்த எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும்.

அடுத்து எண்ணெய் நன்கு காய்ந்து நிறமாறி வந்ததும் ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.இந்த எண்ணெயை மூட்டுவலி இருக்கும் போது லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து வந்தால் வலிகுறையும்.