இலங்கை பெண்ணைத் தாக்கிய யுக்ரைன் பெண்ணுக்கு விளக்கமறியல்!

42

கல்கிசையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி இரவு, கல்கிசை பகுதியில் உள்ள உணவகம் முன்பாக ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பெண், இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியதுடன் கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரவு கண்காணிப்பு பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்ததுடன், பின்னர் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, குறித்த பெண்ணை ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இலங்கை பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கைது செய்யப்பட்ட யுக்ரைன் பெண் கடந்த 12 ஆண்டுகளாக இலங்கையில் வசித்து வருபவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.