இலங்கை புதிய அரசியலமைப்பு: தமிழர் உரிமை காக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

213

இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் – தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக, அந்நாட்டின் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் ஸ்டாலினை சந்தித்து தங்கள்  தமது அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை என தெழிவுபடுத்தினர்.

தமிழர் வாழ்வு, உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களின் அரசியல் சமவுரிமை பாதிக்கப்படக்கூடும் என்பதில் அவர்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், இந்திய அரசும் இதுபற்றி கவனமாக செயல்பட வேண்டிய நிலையுள்ளது.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு விசேட கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தனது சமுக ஊடகப்பதிவில் வெளிப்படுத்தியுள்ளார் அதில் “இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் தாய்மொழி, சமவுரிமை, அரசியல் பங்கேற்பு, பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்படாமல் காக்க இந்திய அரசு தலையீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை–இந்தியா உறவுகளில் மிகவும் முக்கியமான பகுதி என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.