“இலங்கை தமிழர்களுக்காக போராடியுள்ளேன்” தமிழக சட்டசபையில் விஜய்!

126

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (23) பதிலளித்து உரையாற்றினார்.

அதன்போது, இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காகத் தாம் முன்னதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவியுள்ளதாகவும், தனது திரைப்படங்கள் வாயிலாகச் சமூகநீதி குறித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தாம் படப்பிடிப்பிலிருந்து நேரடியாக வந்து முதலமைச்சராகவில்லை எனத் தெரிவித்த அவர், திரையுலகில் 1990களில் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலிருந்தே மக்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.