இலங்கையில் சீனப் பெண் கொலை: முன்னாள் காதலன் மீது சந்தேகம்.!

191

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) மதியம் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகளின் படி, அவரின் முன்னாள் காதலனான சீன நாட்டுப் பிரஜை ஒருவரே இந்தக் கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.