இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.!

103

நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 50,176 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.