இரண்டு துண்டாகி பலியான இளைஞர்கள்.!

139

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவலாண பகுதியில், அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், திரும்பிக் கொண்டிருந்த பிரைம் மூவர் (Prime Mover) வாகனத்தின் இழுவையுடன் (Trailer) மோதி இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிள்களை செலுத்திய இரு இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உ*யி**ரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களில் ஒருவரின் இடுப்புப் பகுதியில் இரண்டாகப் பிளந்து காணப்பட்டதுடன், மற்றைய இளைஞரின் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிகளில் மூன்று பிளந்து காணப்பட்டது.

அவர்கள் எந்தளவுக்கு அதிவேகமாக வந்துள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்களும் நண்பர்களும் சம்பந்தப்பட்ட பிரைம் மூவர் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இவ்வாறு பரிதாபமாக உ*யி*ரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் தாகொன்ன, நீர்கொழும்பு வீதியைச் சேர்ந்த 19 வயதான கவிது ஹஷான் சோமதிலக்க ஆகிய இரு இளைஞர்களாவர்.

பெற்றோர்களின் வளர்ப்பும் விபத்தின் கொடூரமும் இந்த காட்சியில் காட்டப்படுகிறது.

பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்பையும் குறைத்துக்கொள்ள முடியும்.