இணுவில் ஆலயத்திற்கு அருகில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு.!

217

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திங்கட்கிழமை (30) சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டாரிடம் கூறி வெளியேறியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்தின் காரணம் குறித்து தெளிவுபடுத்த சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.