ஆயுர்வேத கூட்டுத்தாபனப் பெயரில் போலி மருந்து மோசடி: நிறுவனம் முற்றுகை.!!

150

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயல் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 26ஆம் திகதி இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவனல்லை – ஹிங்குல பகுதியில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்டகாலமாக போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த இடத்தில் இருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் போது, கூட்டுத்தாபனத்தின் பெயரும் அரச இலச்சினையும் சட்டவிரோதமாக பயன்படுத்தி, போலித் தயாரிப்புகளை உண்மையானதாகக் காட்டி நுகர்வோரை ஏமாற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் போலி மருந்து விற்பனைக்கு எதிரான கட்டுப்பாடுகள் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது; நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்படலாம்.