அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு; கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்வி பதிலின்றி திணறும் அதிகாரமையம்.

184

 

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு : பலத்த சந்தேகங்களை எழுப்பும் சம்பவம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி சூடு சம்பவம் பல்வேறு கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் வாகனத்தின் உள்ளே காணப்பட்ட சாணம் தொடர்பிலும், அதே வாகனம் காணப்பட்ட இடத்துக்கு அருகாமையில் பொலித்தீன் பையில் காணப்பட்ட சாணம் தொடர்பிலும் பல கேள்விகள் எழுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்டவர்கள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால்கூட, அந்த வாகனத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்காமல், கொலை செய்யும் அளவிற்கு துப்பாக்கி சூடு நடத்த பொலிசாருக்கு அதிகாரம் வழங்கியது யார்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், பொலிசாரின் நடவடிக்கைகள் சட்ட எல்லைகளுக்குள் உள்ளதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.