‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது: மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை.!!

28

வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ புயல், இன்று அதிகாலை 2.30 மணியளவில் ‘மிகவும் தீவிரமான புயல்’ நிலையை எட்டியுள்ளதாக வானிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அப்போது புயல் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 890 கிலோமீற்றர் தொலைவில் இருந்தது.

புயல் இன்று மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, பின்னர் வடமேற்குத் திசையில் திரும்பி, நாளை (28) காலை இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய முன்னறிவிப்பின்படி, புயல் இலங்கையை நேரடியாகத் தாக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

எனினும், வங்காள விரிகுடாவின் குறிப்பிட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80–140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கவும், அலைகள் 3–4 மீற்றர் உயரம் வரை எழவும் வாய்ப்புள்ளது. அந்தக் கடற்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே அங்கு உள்ள படகுகள் பாதுகாப்பான திசைக்கு நகர வேண்டும் என்றும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.