அமெரிக்க டெக், நிதி நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை.!!

104

மத்திய கிழக்கில் போரின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Google, Microsoft, Amazon, Nvidia, IBM, Oracle போன்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கிளவுட் சேவைகள் இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) தொடர்புடைய Tasnim செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்ட பட்டியலில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள பல அலுவலகங்கள், தரவுத்தளங்கள் (data centres) இடம்பெற்றுள்ளன.

இந்த தொழில்நுட்பங்கள் இராணுவ பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய வங்கிகள், பொருளாதார மையங்கள் கூட தாக்குதலுக்குள்ளாகலாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் இத்தகைய இடங்களிலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் 12-வது நாளை எட்டியுள்ளது. லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் கடுமையான குண்டுவீச்சுகள் நடந்ததால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் நிதி துறைகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.