அமெரிக்கா–இஸ்ரேல் தொடர்புடைய தொழிற்சாலைகளை விட்டு உடனடி வெளியேறுமாறு அறிவிப்பு.!

98

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பிராந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை, ஈரானில் உள்ள கனநீர் ஆலை மற்றும் “மஞ்சள் கேக்” உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக வெளியிடப்பட்டுள்ளது.

தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியங்களில் உள்ள கனரக தொழிற்சாலைகள் மீது IRGC போராளிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிவைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.