அமெரிக்காவை எச்சரித்த ஈரான் – பேச்சுவார்த்தைக்குப் பின் என்ன நடக்கிறது?

178

ஈரான் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்க்கப்படும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சனிக்கிழமை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

அமெரிக்கா தங்களைத் தாக்கினால், அப்பகுதியில் (மத்திய கிழக்கு) உள்ள அமெரிக்க தளங்களை குறிவைக்க தனது நாடும் தயாராக உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

“வாஷிங்டன் எங்களைத் தாக்கினால், நாங்கள் அமெரிக்க பிரதேசத்தைத் தாக்க மாட்டோம், ஆனால் அப்பகுதியில் (மத்திய கிழக்கு) உள்ள அவர்களின் தளங்களை (இராணுவ தளங்கள்) தாக்குவோம்,” என்று அராக்சி கூறினார்.

டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனை பார்வையிட்ட நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஓமானில் அமெரிக்கா-ஈரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அடுத்த கூட்டத்திற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் அதை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அராக்சி கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அதிகாலையில், “அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் சந்திப்போம்” என்றும் கூறினார் இருப்பினும், வெள்ளிக்கிழமை ஓமனில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.