அமெரிக்காவில் இந்திய வாலிபரின் கொடூரச் செயல்! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.!!

96

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய இளைஞர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த வொடேலா யஷஸ்வி கோத்தப்பள்ளி என்ற இளைஞர் நியூ ஜெர்சி மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை, திருட்டு, பொது ஒழுங்குக்கு கேடு விளைவித்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க குடியேற்றத்துறை அந்த இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றவாளி என குறிப்பிட்டுள்ளது. அவரை நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை நாங்கள் காவலில் வைத்திருப்போம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.