ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையுடன்  தொடர்புடைய ஆயுதங்கள் மீட்பு.!!

45

ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடந்த (21) இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கி வெட்டுக்காயங்களுடன் இருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது செய்து இன்று (24) ஹட்டன் நீதிமன்றம் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டயைடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள தெமோதரை பகுதியைச் சேர்ந்த செல்லையா மனோஜ் என்ற 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர் .

கடந்த வியாழக்கிழமை (21) இரண்டு வயோதிபர்களைகொடூரமாகக் கொலைச் செய்த சம்பவத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்தபோது பொதுமக்களின் உதவியுடன் சனிக்கிழமை (23) கைது செய்திருந்தனர்.

மேலும் சந்தேக நபரால் குறித்த வயோதிப பெண்ணிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக கருதும் அனைத்து தங்க நகைகளும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில்

சந்தேக நபர் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி ஒன்றும் ஒரு கூர்மையான ஆயுதம் ஒன்றினையும் பொலிஸார் ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.