வவுனியாவில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு.!

97

வவுனியா – செக்கடிப்பிலவு பகுதியில் நேற்று (01) மாலை பெய்த கடும் மழை மற்றும் இடிமின்னலின் போது, மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த ஜோசப் அன்ரணி (20) எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், குறித்த இளைஞர் அப்பகுதியிலுள்ள மைதானத்தில் இருந்துள்ளார்.

மழை திடீரென தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மழையில் இருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.