றோயல் லீட் முன்பள்ளியில் மழலைகள் மகிழ்களவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!!

118

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள றோயல் லீட் முன்பள்ளியின் 2026ஆம் ஆண்டிற்கான மழைலைகள் மகிழ்களவிழா 30.06.2026நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.

கள்ளப்பாடு பொதுநோக்குமண்டப வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வானது விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமானது.

அதனைத்தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், ஒலிம்பிக் தீபமேற்றப்பட்டு, முன்பள்ளி மழலைகள் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதையடுத்து மழலைகளின் மகிழ்கள நிகழ்வு இனிதே ஆரம்பித்தது.

அந்தவகையில் நீர்நிரப்புதல், நிறம் தெரிதல், ஓட்டம், பாடசாலைக்கு தயாராதல் உள்ளிட்ட மழலைகளின் விளையாட்டு நிகழ்வுகள் பலவும் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற முன்பள்ளி மழலைகளின் இசைவும் அசைவும் நிகழ்வு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

தொடர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வு வழங்கும் வகையிலான முன்பள்ளி மழலைகளின் வினோத உடை நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

அதேவேளை விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற மழலைகளுக்கு இதன்போது பரிசில்களும், வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கரசா அவர்களும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.