யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

45

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நாளை மறுதினம்(12.06.2026) நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் தலைவர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று(10.06.2026) யாழ். பல்கலைக்கழக காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இசைத்துறை பீடமானது 60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டது. இங்கு கல்வி கற்ற மாணவர்கள் இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் பரந்து காணப்படுகின்றனர். அந்தவகையில் இசை துறையின் வரலாற்றில் ஒரு மைக்கல்லான முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நடத்தப்படவுள்ளது.

12.06.2026 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் காலை 9.00 மணியளவில் எங்களுடைய ஆய்வு மாநாட்டின் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

அத்துடன், எதிர்வரும் 13.06.2026 மாலை 4.00 மணிக்கு எமது பீடம் சார்ந்து கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கந்தையா. கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த ஆய்வு மாநாடானது நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வு மாநாட்டிற்கு எங்களுடைய விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாமல் வெளியில் உள்ள பலரும் ஆதரவுகளை வழங்குகின்றார்கள். எனவே, இதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றார்.