யாழில் 11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 38 வயதுடையவர் கைது!

140

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்தவகையில் குறித்த சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

சிறுமி பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.