யாழில் வெயிலை சமாளிக்க புதுமையான முயற்சி: சாக்குத் துணிகளால் நிழற்பந்தல் அமைப்பு.!

118

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு தற்காலிக நிழல் வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு அமைக்கப்பட்ட இந்த தற்காலிக நிழற்பந்தலை தற்போது பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையின் முன் மாதிரியான இந்த செயபாட்டிற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

 

👉 “⚠️ முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற

 

WhatsApp ல join பண்ணுங்க 👇Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/J1sTnveZTdPEPX2QTYa8SK