மாத்தறையில் இரு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி; 6 பேர் காயம்.!!

57

மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தெவுந்தரவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி ஒன்றும், மாத்தறையிலிருந்து தெவுந்தர நோக்கிச் பயணித்த டிஃபெண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின்போது டிஃபெண்டர் வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் டிஃபெண்டர் வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.