மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

192

மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

குளிக்கச் சென்ற சிறுவர்கள் எத்தனை பேர் என்பதான முழு தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை இன்னொரு சிறுவன் கடலில் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்கள் மற்றும் கடற்படை இணைந்து தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.