பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு.!

57

யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி தெற்குப் பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளையும், தேடுதல் நடவடிக்கையையும் ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றிற்குள்ளிருந்து அந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

உயிரிழந்த சிறுவன் புலோலி தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.