நண்பனுடன் சென்ற சாதாரண தர மாணவனுக்கு நேர்ந்த கதி.!

160

தவலம – உடுகம சாலையில் தவலம சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞனும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் தலங்கல்ல, மல்கல்ல பகுதியைச் சேர்ந்த கசுன் கல்ஹார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். காரை ஓட்டி வந்த மருத்துவரும் காயமடைந்து உடுகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.