துணுக்காய் ஆலங்குளத்தில் மின்சார வேலி அமைக்க இராணுவம் தடை?

77


முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 22.10.2026 தொடக்கம் 26.10.2026 வரை மின்சாரவேலியோ துப்பாக்கி பிரயோகம் தடைசெய்யப்பட்ட ஆயுதபாவனைகளுக்கு குறித்த பிரதேசம் தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளார்கள்.

ஆலங்குளம் சந்தியில் காணப்படும் மரம் ஒன்றில் விசேட அறிவித்தல் என்ற பெயரில் குறித்த காலப்பகுதியில் அந்த பிரதேசத்தில் இராணுவத்தின் பயிற்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு இந்த அறிவிப்பு இராணுவ முகாமிற்கு அருகில் ஒட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் மின்சார வேலி அமைத்துப் பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்

காட்டு யானைகளின் தொல்லையால் பொதுமக்கள் தமது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை அதிகரித்துள்ளது.

கடந்த 20.10.2026 அன்று யானை தாக்குதலில் 73 அகவையுடை வயோதிபரான செல்லத்துரை கணபதிப்பிள்ளை என்பவர் உயிரிழந்துள்ளார் அவரின் இறுதி நிகழ்வு இன்று (22) நடைபெற்றுள்ளது அவரது உடலம் ஆலங்குளம் வீதிஊடாக எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
ஆலங்குளம் கொக்காவில் வீதியில் மாலை 5.00 மணிக்கு பின்னர் மக்களின் வீதியில் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது யானைகள் ஊர்மனைகளுக்குள் வந்துவிடுகின்றன.

இதனைவிட குறித்த உயிரிழந்தவரின் காணிக்குள் இரண்டாவது முறையாகவும் கடந்த 21.10.2026 அன்று இரவு யானை புகுந்து அங்குள்ள தென்னை,மா,பலா உள்ளிட்ட பயன்தரு மரங்களை அழித்துள்ளது.
இவ்வாறான சூழலில், யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் குடியிருப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் மின்சார வேலி முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் நிலையில், அதனைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் அப்பகுதி மக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது