தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் மஹிந்த ராஜபக்ச?

99

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் நாட்டின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​தங்காலைப் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த போதே அவருக்கு இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்ச மற்றும் சிரந்தி ராஜபக்ச ஆகியோரைச் சிறைச்சாலைக்குச் சென்று பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்த அவசர மருத்துவமனை அனுமதி இடம்பெற்றுள்ளது.

​கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நிலவி வந்த நிலையில், அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அவர் துணையின்றி எழும்பி நிற்கக்கூட முடியாத நிலையில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 78 வயதான மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவரது உடல்நிலை தொடர்பாகப் பரவும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கட்சித் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.