தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து.!

143

தம்புள்ளை – கண்டி வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், தம்புள்ளை தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீ விபத்தின் போது எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், கடையில் இருந்த பெருமளவிலான உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.