செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற வாணி விழா.

153

வ/செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் இந்து மாமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா, செட்டியூர் விழுதுகள் மன்றம் – கனடாவின் அனுசரணையுடன் 20.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

 

காலை 9.50 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான இவ்விழா, பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஏடு தொடக்குதல், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புப் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கச் செயலாளரும் ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி லீலா வசந்தகுமார், செட்டியூர் விழுதுகள் மன்றம் சார்பில் தேசகீர்த்தி திரு. த. சந்திரமோகன் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு. சிவபாதம் கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, தோரணம் கட்டுதல், கோலம் போடுதல், மாலை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக, பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு. சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவி தயாழினி சிறந்த பேச்சாளராகத் தெரிவுசெய்யப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மேலும், மாணவிகளான சர்மிகா, டிலானி, அனட்கருணிகா, ஆன்சனுஷிகா மற்றும் மாணவன் அசான் ஆகியோர் பட்டிமன்றப் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர். இவர்களை ஆசிரியர்களான திரு. றளீப் மற்றும் திரு. சிவதீபன் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தினர்.

மாணவர்களின் சமய, கலை மற்றும் பேச்சாற்றல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்வாணி விழா, பாடசாலைச் சமூகத்தினரின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.